துறைமுக நகர சட்டம் தொடர்பில் அமெரிக்கா கவலை!

 


கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய சட்டம் தொடர்பில் அமெரிக்கா இன்னும் கவலை கொண்டுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்க நிறுவனங்களை முதலீடு செய்ய வேண்டாம் என கோரும் நடவடிக்கைளில் அமெரிக்கா ஈடுபடவில்லை.

எவ்வாறாயினும், கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய சட்டம் மற்றும் அதிலுள்ள போதாமைகள் குறித்து சில கவலைகள் உள்ளன.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சீன நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

குறித்த அந்நிறுவனத்துடன் வணிகம் செய்வது நல்லதல்ல. கொழும்பு துறைமுக நகரத்தில் வணிகம் செய்வதற்கான விதிமுறைகளை நிறுவனங்கள் கவனிக்க வேண்டும். கொழும்பு துறைமுகநகர சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து நான் தொடர்ந்தும் கவலையடைந்துள்ளேன்.

ஊழல் செல்வாக்குகள், சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபடத் தூண்டும் பலவீனமான அம்சங்கள் அதில் உள்ளன.

அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதை அமெரிக்கா தடுக்கவில்லை. ஆனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் எந்தவொரு நிறுவனத்துக்குமான முதலீட்டு சூழல் குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளோம்” என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.