பிரபல போதைப்பொருள் சூத்திரதாரி உட்பட நால்வர் கைது!

 


வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரியும் இப்பிரதேசத்தில் போதை விற்பனையின் பிரதான சூத்திரதாரி என நம்பப்படும் நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே பல்வேறு பிரயத்தனத்துக்கும், போராட்டத்துக்கு மத்தியில் தப்பிச் செல்ல முயன்ற இவர்கள் நால்வரும் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (29) பிறைந்துரைச்சேனை, அஸ்லம் ஸ்டோர் வீதியில் வைத்தே 33 வயதுடைய குறித்த பிரதான சூத்திரதாரியும் 20, 22, 2 3 வயதுடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 2 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிராம் 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 16,000 ரூபா பணமும் கைப்பட்டப்பட்டுள்ளது.

இவர்கள் நால்வரும் பிறைந்துரைச்சேனைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சூத்திரதாரி ஏற்கனவே 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் என்பதோடு, கடந்த வாரம் இவரின் மைத்துனர் 8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் குறித்த பிரதேச மக்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கு எதிராக வயது வித்தியாசமின்றி வீதியில் இறங்கி போராடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.