கம்பீர உயரத்தில் கண்ணம்மா!

 


சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதாரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில சீரியல்களுக்கு அவர்கள் அதிக வரவேற்பு அளிக்கின்றனர். இப்படி அவர்கள் அதிக வரவேற்பு அளித்து வரும் சீரியல்களுக்கான மதிப்பீட்டு புள்ளிகளை ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience Research Council) வராந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த வாரத்திற்கான (ஜூன் 26 முதல் ஜூலை 2ம் தேதி வரை – Week 26: Saturday, 26th June 2021 To Friday, 2nd July 2021) புள்ளி விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதில், பல மாதங்களாக தொடர் ஆதிக்கத்தை செலுத்தி வந்த சன் டிவியின் ரோஜா சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியலுடன் போட்டி போட்டு வந்த பாரதி கண்ணம்மா முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் மதிப்பீட்டு புள்ளி பட்டியலில் விஜய் டிவியின் சீரியல்கள் தான் முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ள.

11.31 புள்ளிகள் பெற்றுள்ள பாரதி கண்ணம்மா முதலிடத்திலும், 9.81 புள்ளிகள் பெற்றுள்ள ராஜா ராணி 2 இரண்டாம் உள்ளதாக இந்த சீரியல்களின் தயாரிப்பாளாரான ‘க்ளோபல் வில்லேஜர்ஸ்’ நிறுவனம் அதன் இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சீரியல்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி கூறியும் உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.