சிறுமி துஷ்பிரயோக விவகாரம் - வெளிவரும் பகீர் தகவல்கள்!!

 நாவலப்பிட்டியில் 13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல் பொலிசார், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10 இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். குறித்த சிறுமி 6 முதல் 7 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நாவலப்பிட்டி, ஹரங்கல இலுக்தென்ன பகுதியில் 13 வயது சிறுமியை 42 வயதான திருமணமான ஆசாமியொருவர் சிறுமியை அழைத்துச் சென்று, கற்குகை ஒன்றுக்குள் 4 நாட்களாக துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதுடன், வேறு பல நபர்களாலும் சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டமை விசாரணையில் தெரிய வந்தது.


இந்நிலையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவத்திற்கு உதவிய 6 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பித்த பொலிஸார், கடந்த 16 ஆம் திகதி, ஹரங்கல மற்றும் உதமங்கட பகுதிகளில் உள்ள புதர்கள் மற்றும் வீடுகளை ஆய்வு செய்தபோது, ​​இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

குறித்த இடங்களை பாதிக்கப்பட்ட சிறுமியே நேரில் வந்து அந்த இடங்களை அடையாளம் காட்டினார். சிறுமியால் அடையாளம் காணப்பட்ட இரண்டு கற்குகைகளிற்குள் ஆய்வு செய்த போது, அங்கு படுக்கை விரிப்புக்கள், மற்றும் 50-60 வரையான பியர் ரின்களும் மீட்கப்பட்டன. இதேவேளை பாதிகப்பட்ட சிறுமி தனது 6 அல்லது 7 வயதில் அந்த பகுதியிலுள்ள இளைஞன் ஒருவனால் முதலில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூரப்படுகின்றது.

அதோடு அடையாள அட்டை பெறுவதற்காக 600 ரூபா தேவைப்பட்ட போது, மாமா முறையான 43 வயதானவரிடம் சிறுமி பணம் கேட்டபோது, அவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து விட்டு 1,000 ரூபா பணம் வழங்கியதாக சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரண்டு வருடங்களின் முன்னர், சிறுமியின் தாயார் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தந்தையினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் 32 வயதான ஒருவரால் பின்னர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை பெற்றோர் அறிந்திருந்த போதும், அது பற்றியும் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.

இதனையடுத்து சிறுமியை நாவலப்பிட்டி பொதுமருத்துவமனையில் அனுமதித்தபோது நீண்ட காலமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்தது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் நான்கு பிரதான சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் சகாக்களும் தலைமறைவாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.