சீனாவின் தடுப்பூசி இலங்கைக்கு மற்றுமொரு பங்கு!!


சீனாவின் சீனாபோர்ம் தடுப்பூசியின் மற்றுமோர் பங்கு இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி மேலும் ஒரு மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள், பீஜிங்கிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமானமூடாக இன்று அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மில்லியன் டோஸ் சீனாபோர்ம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த வார தொடக்கத்தில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், இலங்கை அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்ட சீனாபோர்ம் தடுப்பூசியின் இரண்டு மில்லியன் டோஸ் வாரத்திற்குள் நாட்டை வந்தடையும் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.