விளையாடும் போது மயங்கி விழுந்த கிரிக்கெட் வீராங்கணைகள்!!


மேற்கியந்தீவுகள் பெண்கள் கிரிக்கெட் வீராங்கணைகள் இருவர் மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி, மேற்கியந்தீவுககளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிற்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரில் 2வது ஆட்டம் ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

மழை குறுக்கீடுக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய மேற்கியந்தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி மேற்கியந்தீவுகள் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேற்கியந்தீவுகள் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மேற்கியந்தீவுகளின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை சினெல் ஹென்றி திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அணி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து ஸ்டிரெச்சர் மூலம் மைதானத்தை விட்டு வெளியில் தூக்கி சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த அணியின் மற்றொரு வீராங்கனையான செடின் நேஷன் மயக்கம் அடைந்து மைதானத்தில் சரிந்தார்.

இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு இரண்டு மாற்று வீராங்கனைகள் களம் இறக்கப்பட்டு போட்டி தொடர்ந்து நடந்தது. மயங்கி விழுந்த இரு வீராங்கனைகளும் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இருவரும் சுய நினைவுடன் நன்றாக இருப்பதாக மேற்கிந்தியத் தீவுகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் மயங்கி விழுந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.