9 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு!!
கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனை காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தோடு அதில் பாதசாரிகள் மூவரும் , உந்துருளி செலுத்துநர்கள் ஐவரும் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் சாரதிகளுக்கு ஏற்படும் நித்திரைக் கலக்கம், உடல்நலக் குறைவு, மது அருந்தியிருத்தல், கவனயீனம் மற்றும் வீதியின் குறைப்பாடுகளைக் கவனத்திற்கொள்ளாமல் வாகனங்களை செலுத்துதல் என்பன அண்மைக்கால வாகன விபத்துக்களுக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை