சுவிஸ்ஸை வீழ்த்தியது ஸ்பெயன்!!

 


மூன்று தடவைகள் ஐரோப்பிய சம்பியனான ஸ்பெய்ன், மற்றொரு கடும் சவாலுக்கு மத்தியில் 10 வீரர்கள் கொண்ட சுவிட்ஸர்லாந்தை கால் இறுதிப் போட்டியில் 3 – 1 என்ற பெனல்டி முறையில் வெற்றிகொண்டு இந்த வருட ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பயின்ஷிப் அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இதேவேளை, பெல்ஜியத்துக்கு எதிரான மற்றொரு கால் இறுதிப் போட்டியில் 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் இறுக்கமான வெற்றியை ஈட்டிய இத்தாலி அரை இறுதிக்கு முன்னேறியது. உலக கால்பந்தாட்ட தரவரிசையில் 6ஆம் இடத்திலுள்ள ஸ்பெய்ன், 2ஆம் சுற்றில் குரோஏஷியாவுக்கு எதிரான போட்டியிலும் கடும் சவாலுக்கு மத்தியில் மேலதிக நேரத்திலேயே 5 – 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது. சென் பீட்டர்ஸ்பேர்க், கிரெஸ்டோவ்ஸ்கி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் வீரர் ஜோர்டி அல்பா தாழ்வாக உதைத்த பந்தைத் தடுப்பதற்கான சரியான நிலையில் சுவிட்ஸர்லாந்து கோல்காப்பாளர் யார்ன் சொமர்; இருந்தார்.

ஆனால், சுவிட்ஸர்லாந்தின் பின்கள வீரர் டெனிஸ் ஸக்காரியாவின் காலில் பட்ட பந்து திசைமாறி அவரது சொந்த கோலுக்குள்ளேயே சென்றதால் ஸ்பெய்ன் 1 – 0 என முன்னிலை அடைந்தது. போட்டியின் 67ஆவது நிமிடம்வரை ஸ்பெய்ன் முன்னிலையில் இருந்தது. ஆனால், 68ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் பின்களத்தில் ஏற்பட்ட தவறைப் பயன்படுத்திக்கொண்ட சுவிட்ஸர்லாந்து அணித் தலைவர் ஸேர்டான் ஷக்கிரி, பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.

ஒன்பது நிமிடங்கள் கழித்து பெல்ஜியம் வீரர் ரெமோ ப்ரியூலர் ஆபாத்தான முறையில் எதிரணி வீரரை வீழ்த்தியதால் மத்தியஸ்தரின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்கானார். அதன் பின்னர் மேலதிக நேரம் உட்பட 43 நிமிடங்கள் 10 வீரர்களுடனேயே பெல்ஜியம் விளையாடியது. ஆட்டம் முழுநேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் தலா 1 கோலுடன் இருந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 30 நிமிட மேலதிக நேர நிறைவில் போட்டி 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் அரை இறுதிக்கு செல்லும் அணியைத் தீர்மானிக்க பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது. ஸ்பெய்ன் முறையே 2ஆவது, 4ஆவது, 5ஆவது பெனல்டிகளை கோலினுள் புகுத்தியதுடன் 1ஆவதையும் 3ஆவதையும் தவறவிட்டது.

சுவிட்ஸர்லாந்து 1ஆவது பெனல்டியை கோலினுள் புகுத்தியபோதிலும் அடுத்த மூன்றையும் தவறவிட்டது. ஸ்பெய்ன் சுவிட்ஸர்லாந்து புஸ்கே (தவறியது) 0 – 1 காவ்ரானோவிக் (கோல்) டெனி (கோல்) 1 – 0 ஷ்கார் (தவறியது) ரொட்றி (தவறியது) 0 – 0 அக்கஞ்சி (தவறியது) மொரினோ (கோல்) 2 – 0 வர்காஸ் (தவறியது) ஒயார்ஸபல் (கோல்;) 3 – ——————————————- இதற்கு அமைய 3 – 1 என்ற பெனல்டி முறையில் ஸ்பெய்ன் வெற்றிபெற்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.