அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய விடுத்த உத்தரவு!

 


நோய்வாய்ப்பட்டு வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு நடமாடும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் தொடர்பில் கொவிட் வைரஸ் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டு விசேட குழுவினருடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தற்போத துரிதகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நோய்வாய்ப்பட்டு வீட்டை விட்டு வெளியேற முடியத நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் பிரச்சினைக்குரியதாக உள்ளமை அவதானத்திற்குரியது.

ஆகவே பொது சுகாதார சேவையாளர்கள், வைத்திய அதிகாரிகளை ஒன்றிணைத்து விசேட நடமாடும் தடுப்பூசி செலுத்தலை முன்னெடுக்க வேண்டும். கடந்த நாட்களில் பதிவான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள், மற்றும் மரணங்களில் அதிகளவானோர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என குழுவினர் குறிப்பிட்டனர்.

தடுப்பூசி செலுத்துவதை விரிவுப்படுத்த வேண்டும். அத்துடன் தடுப்பூசி பெற்றுக் கொள்வதன் அவசியத்தையும் பொது மக்களுக்கு உரிய தரப்பினர் எடுத்துரைக்க வேண்டும்.

களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் 4 நாட்களுக்குள் தடுப்பூசியை முழுமையாக செலுத்த முடியும் என அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

முதலீட்டு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறையில் உள்ளடங்குபவர்களுக்கு கொவிட் -19 த:டுப்பூசி செலுத்தும் பணிகள் 90 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளன என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆயுர்வேத வைத்தியசாலைகளை அண்மித்த பகுதிகளில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களுக்கு வெற்றிகரமான முறையில் சிகிச்சையளிக்க முடியும். ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற தொற்றாளர்கள் எவரும் மரணிக்கவில்லை.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் . இவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத வைத்திய முறைமைகளை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.