இந்தியர் இருவர் யாழில் அதிரடியாக கைது!!


 இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து மானிப்பாயில் தங்கிருந்த நிலையில் மீண்டும் இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

2008 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்த சந்தேக நபர்கள், மானிப்பாய் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவரும் அவரது சகோதரனுமான இந்தியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் இந்தியாவிற்கு படகில் செல்லும் நோக்கில் ஊர்காவற்றுறைக்கு அண்மையில் உள்ள ஓர் மணல் திட்டுப் பகுதியில் மறைந்திருந்த சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகவே இலங்கைக்குள் பிரவேசித்துள்ளபோதிலும் நுழைவு விசாவின் காலம் கடந்த நிலையில் தற்போது திருட்டுத் தனமாக இந்தியா தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த தீவுப் பகுதிக்கு கொண்டு சென்று இறக்கி விட்டவர்கள் யார், எவரின் உதவியுடன் அவர்கள் இந்தியாவிற்கான படகில் ஏறத் திட்டமிட்டனர் போன்ற மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெருத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.