மன்னாரிலிருந்து முதல் முதல் பெண் விமானி!!.

 


மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல் எவாஞ்சலின் நிறைவு செய்துள்ளார்.

  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாகப் பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.

சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவுசெய்து முழு விமானியாக வெளிவர உள்ள இமானுவேல் எவாஞ்சலின், தமிழர் பிரதேசத்தின் முதலாவது பெண் விமானி என பெயர் எடுத்துள்ளார்.

பொருளாதார ரீதியாக மன்னார் மாவட்டம் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கல்வி கலை கலாச்சாரம் விளையாட்டு தனிமனித திறமைகளில் மன்னார் மாவட்டம் எப்பொழுதும் முன்னிலையிலேயே நிற்கின்றது.

மஅந்தவகையில் ன்னர் மண்ணிற்கு பெருமை தேடித்தரும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இமானுவேல் எவாஞ்சலின் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.