நடிகர் யோகி பாபுவுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன்!!
கிரிக்கெட் வீரர் நடராஜனும் நடிகர் யோகி பாபுவும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி யோகிபாபுவின் 'மண்டேலா' படத்தை பாராட்டியிருந்தார்.
யோகி பாபு எனது நண்பர்தான்' என்றுக்கூறி ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை நடிகர் யோகி பாபுவுடன் வீடியோ அழைப்பில் பேசவைத்தார் நடராஜன்.
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு, கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு யோகி பாபு முருகர் சிலையை பரிசளித்துள்ளார். யோகி பாபு தீவிர முருக பக்தர் ஆவார்.
நடிகர் யோகி பாபுவை நேரில் சந்தித்த புகைப்படங்களை உற்சாகமுடன் வெளியிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் நடராஜன்.
அத்துடன் நடராஜன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் யோகிபாபுவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ”நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய நாள். அன்பான மற்றும் கலகலப்பான நண்பர், நடிகர் யோகிபாபுவை சந்தித்த மகிழ்ச்சியான தருணம்” என பதிவிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை