இரண்டு மாதங்களுக்குப் பின் ஆரம்பமானது ஆலய வழிபாடுகள்!!

 


கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக இடைநிறுத்தப்பட்டுயிருந்த ஆலய வழிபாடுகள், நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ஆலய வழிபாடுகள் இடம்பெறலாம்.

இந்நிலையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு (11) திருப்பலிகள் இடம்பெற்றன .

அதன்படி மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் தலைமையில் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுகாதார நடைமுறையின் கீழ் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டன. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.