அரசியல்வாதிகளின் ஆதரவுக்கு ஈரான் கண்டனம்!!


ஈரான் ஆட்சியாளர்களுக்கெதிரான பேரணியில், மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவு அளித்தமைக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்லோவேனியா தூதருக்கு ஈரான் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஒரு காலத்தில் சதாம் ஆதரவுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்க்கஸுக்கு அவர்கள் தங்களை மலிவான விலைக்கு விற்றுவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்லோவேனியா பிரதமர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருதரப்பு தூதரக உறவுக்கு எதிரானது’ என கூறினார்.

ஈரான் தேசிய எதிர்ப்பு சபை (என்ஆர்சிஐ) என்ற அமைப்பானது முஜாகிதீன்-ஏ-கல்க் என்ற இயக்கத்தின் அரசியல் பிரிவாகும். ஈரானால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஈரானின் மத ஆட்சியாளர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை பேரணி நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் மைக் பொம்பேயோ, ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர்கள் பாப் மெனன்டஸ், கோரி புக்கர், குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ரோய் பிளன்ட், டெட் குரூஸ், இத்தாலி வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஃபிரான்கோ ஃபிராட்டினி, கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஸ்லோவேனியா பிரதமர் ஜானெஸ் ஜோன்சா உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்துகொண்டு என்ஆர்சிஐ அமைப்பின் முயற்சியைப் பாராட்டிப் பேசினர்.

பெர்லினிலும் பிற இடங்களிலும் அணிதிரண்ட ஈரானின் நாடுகடத்தப்பட்ட எதிர்ப்பின் ஆதரவாளர்கள், இஸ்லாமிய குடியரசின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மீது வழக்குத் தொடருமாறு கோரினர்.

ஒரு முக்கிய உரையில், ஈரானின் தேசிய எதிர்ப்புக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியம் ராஜாவி, ரைசி 1988ஆம் 30,000 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு உதவியாளராக இருந்தார் என்று குற்றம் சாட்டினார்.

ரைசியின் தேர்தல் மனித உரிமைகளுக்கான ஒரு அடியாகும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியதுடன், ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை சட்டவிரோதமாக தூக்கிலிட வேண்டும் என கூறியதில் அவரது பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.