ராஜித சேனாரத்ன வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

 


தேவைப்பட்டால் வேறு கட்சிக்குச் செல்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு அரசியல்வாதிக்கு எந்த அரசியல் கட்சி என்பதை விட கொள்கைகளே முக்கியமானது என அவர் தெரிவித்தார்.

மிக முக்கியமானது ஒரு அரசியல்வாதியின் கொள்கைகள் மற்றும் அவர் சேர்ந்த கட்சி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது அவசியம் என்று நான் உணர்ந்தால் என்னால் வேறொரு கட்சிக்கு செல்ல முடியும் என அவர் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

“நான் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து இருக்கலாம். ஆனால் நான் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. எனது கொள்கைகள் பொதுநலக்கோட்டின் அடிப்படையிலானது” என தெரிவித்துள்ளார்.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் குடும்ப பெயரில் உங்கள் அயலவரின் பெயரை உள்ளிட்டால் எவ்வாறு நீங்கள் உணருவீர்கள் என அவர் ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.