இலங்கை சுகாதார அமைச்சு தடுப்பூசி தொடர்பில் விழிப்புணர்வு!!

 


இலங்கையில் அண்மைய  வெளியான தகவல்படி தடுப்பூசி செலுத்தாதவர்களே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன இததனை தெரிவித்துள்ளார். முதலாவது கொரோனா அலையால் நாட்டில் 13 கொரோனா மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்தன.

இரண்டாவது அலையில் 591 கொரோனா மரணங்கள் சம்பவித்திருந்தன. எனினும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான கொரோனா மூன்றாவது அலையில் மாத்திரம் 3 ஆயிரத்து 450 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனூடாக கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil NewsPaper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colomb

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.