இலங்கை மாணவர்களின் பரிதாப நிலை!

 


இலங்கையில் இணைய வழி கற்கையில் இணைந்து கொள்வதற்காக நெட்வேர்க் கிடைக்காத மாணவர்கள் மிகவும் ஆபத்தினை சந்தித்து தமது கல்வியினை கற்கும் புகைப்படங்கள்  வெளியாகியுள்ளது.  

கிராமங்களில் நெட்வேர்க் கிடைக்காத மாணவர்கள் அடர்த்தியான புதர்கள் ஊடாக சிறுத்தைகள், யானைகளைக் கடந்து மூன்று கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் பொகிட்டிவாயவைச் சேர்ந்த ஆசிரியையும் 45 மாணவர்களும் இணைய சிக்னலைப் பெறுவதற்காக உயரமான பாறையொன்றின் மீது ஏறுகின்றனர். கொவிட் காரணமாக பாடசாலைகளுக்கு செல்ல முடியாத தனது மாணவர்களிற்கான பாடங்களை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்ப ஆசிரியை நிமாலி அனுருதிக அந்த சிக்னல்களைப் பயன்படுத்துகின்றார்.

அந்தக் கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் ஆசிரியரின் இணையப் பாடங்களை பெற்றுக்கொள்வதற்காக அந்த ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். அவர்கள் அனைவரிடமும் கையடக்கத் தொலைபேசியோ அல்லது மடிக்கணினியோ இல்லை. இந்நிலையில் நான்கு ஐந்து சிறுவர்கள் ஒரே கையடக்கத் தொலைபேசியை அல்லது மடிக்கணினியைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்களின் பெற்றோர்கள் அனேகமாக விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் என்பதனால், தங்கள் வேலைகளையும் விட்டுவிட்டு அவர்களும் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உயரமான பாறைகளை நோக்கிச் செல்கின்றனர். தனது ஆறாம் வகுப்பு மகனுடன் செல்லும் எச்.எம். பத்மினிகுமாரி சிறுவர்கள் நாளொன்றிற்கு இரண்டு தரம் உயரமான மரங்களில் ஏறுகின்றதாகவும் இது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

தமது கிராமம் அடிப்படை வசதிகள் அற்றதாக காணப்படுகின்றது,அந்தக் கிராமத்தின் பிள்ளைகள் 16 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கின்ற நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பாடசாலை தற்போது மூடப்பட்டுள்ளது. அதேபோல லுனுகலவில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடர்ந்த காட்டில் உள்ள மர உச்சிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

மாணவர்கள்  இவ்வாறு இணைய வசதியினை பெறுவதற்காக   30 அடி உயரமான மரத்தில் ஏறுவதாகவும்  ,   அதிலிருந்தாலே மாணவர்களினால் இணைய வசதிகளைப் பெற முடியும் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர்கள் ஒவ்வொருவராக அம்மரத்தில் ஏறி  தங்கள் பாடங்களை பதிவேற்றிக் கொள்கின்றதாகவும்  கூறப்படுகின்றது.

மாணவர்கள் இவ்வாறு ஆபத்தான முறைகளில் கலவிபயிலும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் சமூக ஆர்வலர்கள் பலரும்  மாணவர்களின் இந்த பரிதாப நிலை தொடர்பில்  தமது கவலைகளை வெளியிட்டுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.