1000 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை வருகை!!

 


இலங்கைக்கு வாராந்தம் 1000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர எதிர்பார்ப்பதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து அவர்களை அழைத்துவர எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று ஜுலை 30ஆம் திகதி மொஸ்கொவ் நகரை நோக்கிப் பயணிக்க உள்ளதாகவும், அந்த விமானம் மீண்டும் ஓகஸ்ட் முதலாம் திகதி ரஷ்ய பயணிகளுடன் நாட்டை வந்தடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் மொஸ்கொவ் நகரிலிருந்து இலங்கைக்கு விமானப் பயணங்கள் இடம்பெறும் என்பதுடன், ஒவ்வொரு வாரமும் 250 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை தாம் அழைத்துவர எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.