அன்பியல்....கவிதை!!


 மாய வாள் வீச்சில்

மக்கிப் போகும் மனதிலும் 

உடையாமல் இருக்கிறது 

அடர்ந்த இலட்சியங்கள்....


பூக்காடுகளின் புனிதம்

புதைகுழிக்குப் போவதில்லை....

ஒப்பாரியின் ராகம்

இழப்பிற்கு ஈடில்லை....


கண்ணுக்கெட்டிய கனிவிலும்

கசடுகள் நிறைந்திருக்கிறது....

தீண்டலின் நாதமின்றி

சலசலப்பு சாத்தியமில்லை தான்....


இனிமையற்ற இல்லறங்கள்

தணலாகும் தாம்பத்தியங்கள்

வார்த்தைகளின் வக்கிரங்கள்

கடந்து நிற்கிறது அன்புலகு....


தீக்காடுகளை  குளிர்விக்கிறது

மலர் வனங்கள்.....

வார்த்தைப் பூக்களை 

வடியவிட்டால் 

குரோதங்கள் குன்றிவிடும்.....


கோபிகை. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.