ஆசிரியரின் மோசமான செயல்; மாணவிக்கு நேர்ந்த துயரம்!!

 கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவியை, காரில் ஏற்றிச் சென்று, துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 49 வயதான மாற்றுத்திறனாளி ஆசிரியர் தலங்கம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் அத்தை லண்டனில் வசித்து வருவதாகவும், லண்டன் செல்வதற்கு பரீட்சையில் தோற்ற சில புத்தகங்களைப் படிக்க வேண்டும், அவற்ற கொழும்பிலேயே பெறலாமென ஆசிரியர், மாணவியை ஏமாற்றி கொள்ளுப்பிட்டிக்கு தனது காரில் மாணவியை ஏற்றிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் மாணவியை காரின் முன் இருக்கையில் உட்கார வைத்து அழைத்து சென்று கிம்புலாவல வாகன நிறுத்துமிடத்தில் , மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி முல்லேரியா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி சன்ன பெரேரா முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை  தெரியவந்ததாக  பொலிசார் தெரிவித்தனர்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.