வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக த. மங்களேஸ்வரன் நியமனம்!

 


இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் “இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்” எனத் தரமுயரும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்களினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தைத் தாபிப்பதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு நிலையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 Rector of the Vavuniya Campus of the University of Jaffna Dr. Manganesewaran has been appointed as the Vice Chancellor of the University of Vavuniya

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.