சவப்பெட்டிகளைக் கோரும் யாழ் தொழிலதிபர்!!

 


நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் காட்போட் அட்டை சவப்பெட்டிகளுக்கு தற்பொழுது அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழிற்கு 100 பெட்டிகளை தொழிலதிபர் ஒருவர் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது. தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் காட்போட் அட்டை சவப்பெட்டிகளை முதன்முதலில் தெஹிவளை கல்கிஸ்சை நகராட்சி மன்றம் அறிமுகப்படுத்தியது.

தெஹிவளை கல்கிஸ்சை நகராட்சி மன்ற உறுப்பினர் பிரியந்த சகபந்துவே இந்த திட்டத்தின் முன்னோடியாவார். அதனை தொடர்ந்து, தெஹிவோவிட்ட, பெல்மடுல்ல, வரகாபொல, பெலியத்த பிரதேச சபைகள் இந்த சவப்பெட்டிகளை கோரியுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 100 சவப்பெட்டிகளை கோரியதாக பிரியந்த சகபந்துவே கூறியுள்ளார்.

 மரத்தால் தயாரிக்கப்படும் சவப்பெட்டி முழுமையாக எரிவதற்கு அரை மணி நேரம் எடுக்கும் என கூறப்படும் அதேவேளை, அட்டைப் பெட்டி ஐந்து நிமிடங்களில் முழுமையாக எரிந்துவிடும். எனவே அட்டை சவப்பெட்டிகளில் உடல்களை தகனம் செய்யும் போது தகனங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயுவின் அளவு குறைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் , கோவிட் -19 தவிர மற்ற காரணங்களால் சராசரியாக 400 பேர் தினமும் இறக்கின்றனர். தினமும் 200 மரங்கள் சவப்பெட்டிகளை தயாரிக்க வெட்டப்படுகின்றதாக கூறிய பிரியந்த சகபந்துவே, அட்டை சவப்பெட்டிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை எனவும் கூறினார்.

இதேவேளை சீனாவில் தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு இந்த திட்டம் 2019 இல் சகபந்துவால் நகராட்சி மன்றத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.