இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று முதல் 15-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை!


கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டால் பெரும் திரளான பொதுமக்கள் கூடுவதுடன் 13-ந் தேதியன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் தங்கி விடக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே 12-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கோவில்களில் மேற்படி நாட்களில் தினசரி பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வழக்கம்போல் நடைபெறும். ஆடி கடைசி வெள்ளி திருவிழாவன்று உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தவும் பொதுமக்கள் வசதிக்காக மேற்படி நிகழ்வினை முழுவதும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.