யாழில் 168 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

 


யாழ். வடமராட்சி தொண்டமனாறு கடற்பரப்பில் 168 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.


தொண்டமானாறு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த 168 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர்களை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று, சிலாவத்துறை மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

- நிருபர் சப்தன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.