கொரோன தொற்றினால் ஏற்ட்படும் மரணத்தின் விழிப்புணர்வு!

 


கொரோனா தொற்றி விட்டது என கொரோனா அறிகுறிகளுடன் 16 நாட்கள் தன்னைதானே தனிமைப்படுத்திய நபர்..  அறிகுறிகள் சில குறையாத காரணத்தால் வைத்தியசாலையை நாடினார்.. 


வைத்தியசாலையில் துரித antigen  பரிசோதனை negative . அதனை அடுத்து PCR negative.. இழுபறிகள், பிடுங்குப்பாடுகள்.. மீண்டும் PCR.. 


இதற்கிடையில் நன்றாக பேசிக்கொண்டு இருந்த மனிதர் சடுதியாக கட்டிலில் சரிந்தார்.. இதயம் துடித்தாலும் சுவாசம் இயங்க மறுத்தது.. 


இருக்கும் கருவிகளை வைத்து 1 1/2 மணிநேர போராட்டம்.. அதிகாலை ஒரு மணிக்கு குளித்தது போல உடல்.. உடல் தளர்ந்தாலும் மனம் தளரவில்லை.. கொஞ்ச நேரத்தில் இதயமும் துடிக்க மறுத்தது.. எல்லாம் முடிந்தது.. 


எப்படி நிகழ்ந்தது.. 


கொரோனா வந்தால் தனிமைப்படுத்தினால் போதும் என்ற காலம் போய்விட்டது.. 


கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்ட பலரை கேட்டால் தெரியும் பின்விளைவுகள் எப்படி என்று,, 


உரிய முறையில் மருத்துவ ஆலோசனைப்படி சில மருந்துகளை எடுப்பது கட்டாயமானது.. 


உதாரணமாக கொரோனாவின் முக்கிய பின்விளைவுகளில் ஒன்று குருதி கலன்களில் குருதி கட்டி படல்.. 


இதற்கான மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்த தவறினால் அசாதாரணமாக குருதி கலன்களில் குருதி கட்டி பட்டு, அது குருதி ஓட்டத்தை தடை செய்வதால் குறித்த பகுதிக்கு oxygen கிடைக்காது செல்லும்.. இதனால் மரணமும் சம்பவிக்கும்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.