கற்கோவளத்தில் இராணுவத்தினர் காணி சுவீகரிப்பு தடுப்பு!

கற்கோவளம் பகுதியில் இராணுவத்தினருக்கு முகாம் அமைப்பதற்காக நான்கு ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முற்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.இவ் பகுதி மக்கள்  பாராளுமன்ற எம்பிக்கள் உதவியுடன் தடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணியை  சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அளவை மேற்கொள்ள வந்த நில அளவையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நில அளவை மேற்கொள்ள செல்லவிடாது வீதிக்கு குறுக்கே இருந்து தடுத்து நிறுத்தியதுடன் குறித்த காணிகளை இராணுவத்திற்கு வழங்க விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியிருந்தனர்.

போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்ததற்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களால் கடிதம் எழுதி நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர் ந. காண்டீபன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.