தலிபான் கொடி ஏற்றப்பட்டது!


ஆப்கானிஸ்தான்  தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள்  ஜனாதிபதி மாளிகையில் தலிபான் கொடி ஏற்றப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானை 'ஆப்கினிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட்' என தலிபான்கள் பிரகடனம் செய்துள்ளனர். 


ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தப்பியோடிவிட்டார். இதையடுத்து “போர் முடிந்துவிட்டது” என தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.



இதேவேளை நேற்று காபூல் நகரத்துக்குள் பெரிதாக சண்டை ஏதும் நடக்கவில்லை. பெரும்பாலும் ரத்தக் களரி ஏற்படாமலேயே தாலிபன்கள் நகரத்தின் பெரும்பகுதியைக் கைபற்றிவிட்டனர்.


யாரையும் கொல்ல மாட்டோம், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஷாஹீன் தெரிவித்தார். மக்கள் தங்களது உடைமைகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.