கோவிட் பாதிப்பு பிரித்தானியாவில் இன்றய நிலரவரம்!

 


பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவலின் படி கோவிட் தொற்றி 28 நாட்களுக்குள் 114 (நேற்று 113) பேர்  உயிரிழந்துள்ளார்கள் மற்றும் 37,314 தொற்றுகள் பதிவாகி உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 87 விகிதம் பேர் இதுவரை குறைந்தது 1 தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர் மேலும் 76 விகிதம் பேர் இரண்டு தடுப்பு மருந்தையும் பெற்றுள்ளனர்.

பிரித்தானியாவில் கோவிட் பாதிப்பின் முழு விபரம் பின்வருமாறு:

பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் 114 பேர் பலியாகி உள்ளார்கள். இதன் காரணமாகக் கொரோனா வைரஸ் தாக்கி 28 நாட்களுக்குள் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 131,487 ஆக உள்ளது. கடந்த 7 நாட்களில் 688 பேர் பலியாகி உள்ளார்கள். இறப்புகள் விகிதம் சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது 10.4% விகிதம் அதிகரித்துள்ளது.

இதேவேளை பிரித்தானியா மேலும் 37,314 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 6,429,147 ஆக உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது இந்த வாரம் தொற்றுகள் 9.6% விகிதம் அதிகரித்து உள்ளது.

20 ஆகஸ்ட் 2021 வெளியிட்ட தகவலின் படி இதுவரை 47,516,505 பேருக்குத் முதல் தடுப்பு மருந்தும் 41,332,128 பேருக்கு இரண்டாவது தடுப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 88,848,633 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுளள்ளது. பிரித்தானியாவின் சனத்தொகை 2019 இன் மத்தியில் 66.8 மில்லியனாக ஆக இருந்தது. இதற்கிணங்க தற்பொழுது ஏறக்குறைய 71.132 விகிதத்துக்கு மேலான மக்களுக்கு முதல் தடுப்பூசிகள் செலுத்தபட்டுளள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.