7 பேருக்கு தடை விதிக்கின்றது பிரித்தானியா


 ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேருக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.

இவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டு பயணத்தடை விதித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விலட்மிர் புட்டின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் நவல்னி கடந்த வருடம் உயிருக்கு போராடிய நிலையில் தற்போது பிழைத்துள்ளார்.

தன் மீதான இந்த தாக்குதலுக்கு புட்டினே உத்தரவிட்டிருப்பார் என்று நவல்னி குறிப்பிட்டுள்ளார்.

தடை விதிக்கப்பட்ட ஏழு பேரும் ரஷ்ய மத்திய பாதுகாப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

சர்வதேச சட்டத்தை மீறும் வகையில்  இரசாயன ஆயுதம் ரஷ்யாவினால் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது குறித்த வெளிப்படையான விசாரணை அவசியம் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிடம் உள் ள  Novichok  எனும் நரம்பியல் இரசாயனங்களின் இருப்புக்களை வெளிப்படுத்துமாறு ரஷ்யாவை பிரித்தானியா கோரியுள்ளது.

 Novichok என்பது பனிப்போரின் போது சோவியன் யூனியனினால் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.இந்த இரசாயனம் தசைகளை செயலிழக்கச் செய்வதுடன் மூச்சுத்திணறலுடன் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி சேர்பியாவின் டொம்ஸிக்கிலிருந்து பயணித்த 45 வயதுடைய நவல்னி மொஸ்கோவில் தரையிறங்கிய போது பேச முடியாத நிலையில் உடடினயாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் ஜேர்மனியின் பேர்லின் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டார்.32 நாட்கள் இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன் இதில் 24 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜனவரி மாதம் அவர் ரஷ்யாவுக்கு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.