‘சக்தி’ இலங்கையினை நோக்கி வருகிறது

 


இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டன் ஒட்சிசன் வாயுவுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் இன்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து 40 டன் பிராணவாயுவுடன் நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி (SLNS)என்ற கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.