ஊரடங்கில் 452 பேர் கைது

 


இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 452 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 56, 294 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கு பிரவேசிக்கும், அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் 639 வாகனங்களும், 1, 128 நபர்களும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.