இருட்டில் நடக்கவிருந்த திருட்டுச் சம்பவம் தடுக்கப்பட்டது.


கடந்த  மாதம் 31 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் மாநகரசபையின் அனுமதியில்லாமல் பலாலி வீதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த விளம்பர நிறுவனம் ஒன்று வீதிக்கு குறுக்காக கம்பம் நாட்ட முற்பட்டது. 


மாநகரசபையின் முதல்வர், பார்த்தீபன், 

ரெமீடியஸ் ஆகியோர் அந்த இடத்தை அந்த நிறுவனத்திற்கு  அடையாளம் காட்டியுள்ளார்கள் என்பது CCT கமரா மூலம் தெரியவந்தது. பின்னர் அந்த செயற்பாடு மக்களாலும், வட்டார உறுப்பினர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டது. 


கிட்டத்தட்ட 8 இடங்களில் அந்த செயற்பாடு நடைபெறவிருந்தது. முறைப்படி அனுமதி பெற்றிருந்தால் இந்த விளம்பர பலகை மூலம் சாதாரண விளம்பர கட்டணத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட மாநகரசபைக்கு ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு பலகைக்கு 200000 ரூபாய் கிடைக்கும். 8 பலகைக்கும் 16,00000 ரூபாய் கிடைக்கும். 


மாநகரசபையில் அனுமதி எடுக்காமல் முதல்வர் ஏன்  இந்த செயற்பாட்டிற்கு துணை போனார்?


அந்த நிறுவனத்திற்கு 50% கழிவு வழங்கும்படி முதல்வர் RDA இற்கு ஏன் கடிதம் எழுதினார்?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.