ஜைன குரு பாகுபலி. !

 


சிறந்த ஜைன குருக்களில் ஒருவரான பாகுபலியின் சிலை, உலகத்திலேயே மிக உயரமான சிலையாக (சுமார் 156 அடி) தென்னிந்தியாவில் இருக்கிறது.


ஒரு மலையையே, சிலையாக்கியிருக்கிறார்கள். அதனுடைய காலின் சிறிய விரல், உங்களுடைய முழு உடல் அளவு இருக்கும்.


அந்தச் சிலையை முழுவதுமாகப் பார்க்க, நாம் ஒரு கிரேனில் ஏறி ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல வேண்டும்.


அது கிட்டத்தட்ட ஒரு மலையின் மேல் ஏறுவதற்குச் சமம்தான். அதன் தலை, பல பேர்கள் ஒருசேர நிற்கும் அளவிற்குப் பெரியது.


பாகுபலி...இதன் அர்த்தம், மிகவும் வலுவான மனிதன் என்பதாகும்.பாகு என்றால் தோள்கள். அதாவது உருக்குப் போன்ற தோள்கள் படைத்தவர் என்று அர்த்தம்.


அவர் அந்த மலையின் பக்கத்தில் நின்றவாறு தியானம் செய்தார்.அப்பொழுது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது, குருவிகள் தன் கூடுகளை அவர் காதுகளில் அமைத்ததாம்.


பல ஊர்வனங்கள் அவர் உடல் முழுவதும் ஏறி இறங்கியிருக்கின்றன. அந்தச் சிலை உலகத்திலேயே அழகு வாய்ந்தது எனலாம்.


அதை உருவாக்க ஆயிரக் கணக்கான கலைஞர்கள் ஒருங்கினைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.


பாகுபலி, 24 ஜைன தீர்த்தரங்கரர்களில் ஒருவராகச் சேர்க்கப்படாவிட்டாலும், அவரை ஒரு தனி தீர்த்தரங்கரராகவே கருதினார்கள்.


அவருடைய தியானத்தில் மிகவும் ஆழமாக இருந்தார்.அவர் ஒரு சிறந்த குரு. சிறந்த தியானத் தன்மை உடையவர்.


பறவைகள் அவரது காதுகளில் கூடுகட்டியதாகவும் மற்றும் பல ஊர்வனங்கள் அவருடைய உடல் முழுவதும் ஊர்ந்து சென்றதாகவும் சொன்னவைகள் அனைத்தும் ஒரு உருவகம்தான்.


அந்த மனிதன், தன் தியான உணர்வில் மிக ஆழத்தில் இருக்கும் பொழுது, அவரது உடலை மலர்களும் இலைகளும் மூடியிருக்கின்றன.


ஆனால் அவர் புற உலகை முற்றிலும் மறந்து விட்டார்.அவர் தியானத்தில் மிக ஆழமாக  இருந்தார்.


--ஓஷோ--

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.