ஊரடங்கு சட்டத்தை மீறி இடம்பெற்ற இறுதிச் சடங்கு

 


மோதல் காரணமாக உயிரிழந்த இளைஞன் ஒருவரின் இறுதிச் சடங்கில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.


கடந்த தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் 24 வயதுடைய குறித்த இளைஞன் உயிரிழந்திருந்தார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சடலத்தினை தகனம் செய்யுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.

குறித்த இளைஞனின் சடலத்தை தகனம் செய்யும் போது அங்கு ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.