முழுமையாக பால் மா மீதான வரி நீக்கப்பட்டது!

 


இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார் .

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,  தற்போது உள்ளூர் சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.