முட்டை மசாலா ஆப்பம்!!

 


தேவையான பொருட்கள்:


1. முட்டை - 2 எண்ணம்

2. பச்சரிசி - 250 கிராம்

3. புழுங்கல் அரிசி - 250 கிராம்

4. உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி

5. கல் உப்பு - 2 தேக்கரண்டி

6. சோடா உப்பு - 4 சிட்டிகை

7. பச்சை மிளகாய் - 4 எண்ணம்

8. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்

9. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

11. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

12. தேங்காய் துருவல் - 1 கப்.

செய்முறை:

1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.

2. ஊற வைத்தவைகளைக் கழுவிச் சுத்தம் செய்து, அதனுடன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் தோசை மாவு போல அரைக்கவும்.

3. அரைக்கும் போது தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

4. அரைத்த மாவை மறுநாள் எடுத்து அத்துடன் சோடா உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கலந்து வைக்கவும்.

5. இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கி மாவில் ஊற்றவும்.

6. பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்து மாவில் கலந்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

7. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவி விட்டு, அதில் இரண்டு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி விடவும்.

8. ஆப்பம் வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம்.

குறிப்பு: இந்த முட்டை மசாலா ஆப்பத்திற்கு கோழிக் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.