ஆதி காதல் - கவிதை!!

 


உன் பிசாசுக் கண்களை

இரக்கமற்று ஏவுகிறாய்


காதலெனும் முடிச்சோடு.
அது இலக்கு பிழறாமல்
ஏவுகணையாய்த் துளைக்கிறது
என் நெஞ்சை.
இதைக் கௌரவக் கொலைக்கு
சமமெனலாம்.
மனிதத்தில்
உயர்ந்தவன் யார்...?
தாழ்ந்தவன் யார்...?
குருதியில் பிரிவு உண்டு
இதயத்திலது இல்லை.
போவது உயிராக இருக்கலாம்
வீழ்வது உடலாக இருக்கலாம்
ஆதாம் ஏவாளின் ஆதிகாதல்
சாவதேது...? வீழ்வதேது...?
மானிடனே... ...!

- பாரியன்பன் நாகராஜன், 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.