14 இடங்கள் யாழில் அபாயவலயமாக அறிவிப்பு!!
யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அபாய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 11,529 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் , 314 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில், கடந்த 14 நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அபாய பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, யாழ்ப்பாணத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், முல்லைத்தீவில் 5, கிளிநொச்சியில் 4, மன்னாரில் 4, வவுனியாவில் 3, மட்டக்களப்பில் 13, அம்பாறையில் 7, திருகோணமலையில் 8, அநுராதபுரத்தில் 19, கம்பஹாவில் 15, களுத்துறையில் 15, குருநாகலில் 23, புத்தளத்தில் 13, கண்டியில் 23, மாத்தளையில் 12, நுவரெலியாவில் 13, கேகாலையில் 11, இரத்தினபுரியில் 17, பொலநறுவையில் 8, பதுளையில் 16, மொனராகலையில் 11, காலியில் 20, அம்பாந் தோட்டையில் 12, மாத்தறையில் 17 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளும் அபாயமிக்க பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை