வாழ்க்கை- கவிதை!!

 


விட்டுக் கொடுக்கும்

மனப்பான்மை இல்லை
விட்டுக் கொடுத்தனர்
மண வாழ்க்கை இல்லை

‘நான்’ என்றாள்
அவள்
‘நான்’ என்றான்
அவன்
நாசமானது
வாழ்க்கை

பழித்தாள்
அவனது குடுப்பத்தினரை
அவனும் பழித்தான்
பழிக்கப்பட்டது
தங்கள் வாழ்க்கை

பெற்றோர் தவறால்
பாழாய்ப் போனது
பாவம்
தங்கள்
குழந்தையின் வாழ்வும்…

சுகம் ருசித்ததோ
பெற்றோர்
துக்கம் பெற்றதோ
பாவம்
குழந்தை

வாழ்க்கை
ஒரு
வாய்ப்பு என்றனர்
இப்படி
வாழாமல் போவதற்கோ !

திருமணம்
ஆயிரம் காலத்துப் பயிராம்
அரை ஆயுள் காலம் கூட
நீடிக்கவில்லையே
காதல் திருமணமும்

- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.