மலையகத்தில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்!

 


கொரோனா பரவலை தடுக்க நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்துள்ளது. அத்துடன் நகரையும்1 அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பொலிசார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்பட முற்பட்ட சிலர், பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அத்துடன், முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய சிலர் கைது செய்யப்பட்டனர்.

மலையக நகர் பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளில் இயல்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் வேலைக்குச்சென்றனர்.  


Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.