வெற்றியின் மந்திரச்சொல் - பொன்மொழிகள்

 





 இன்பம் காண நாம் இயற்கைக்கு உண்மையாக இருந்து வயதிற்கு ஏற்ப வாழவேண்டும்.

- வில்லியம் ஹெச்விட்.

 கணவனுக்கு மனைவி இளம் வயதில் எஜமானி; நடு வயதில் கூட்டாளி; தள்ளாத வயதில் தாய்.

- ஓர் அறிஞர்.

 அறிவுரையின் விலையும் மதிப்பும் ஒன்றுதான். அதாவது ஒன்றுமில்லை.
- டக்லஸ் மக் ஆர்தர்.

 உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கக் கூடிய பெரிய மனிதர் உங்களைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

- கன்பூசியஸ்.

 வீசும் காற்றும், எழும் அலையும் எப்பொழுதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.

- கிப்பன்.

 ஒவ்வொரு துரதிஷ்டத்தையும் பொறுமையால்தான் வெல்ல வேண்டும்.

- வர்ஜில்.

 மண்ணுலகில் மனிதருக்கு வேண்டியது வெகு சொற்பம்; அதுவும் சில நாட்களுக்கே.

- கோல்ட்ஸ்மித்.


 அதிகாரத்தை நாடி சுதந்திரத்தைப் பறிகொடுப்பது விபரீத ஆசை.

- பிரான்சிஸ் பேகன்.

 எண்ணத்திற்கேற்ப வசதிகளைப் பெருக்குவதை விட வசதிகளுக்கேற்ப எண்ணங்களை குறைப்பது நலம்.

- அரிஸ்டாட்டில்.

 தனக்குக் கொம்புகளை தேடிப்போன கழுதை, தன் காதுகளையும் இழந்ததாம்.

- அராபிய பழமொழி.

 ஆசை அனுபவத்தை வென்று விடும்; எடுத்துக்காட்டு இரனடாவதாக செய்து கொள்ளும் திருமணம்.

- சாமுவேல் ஜான்சன்.

 அதிகார போதைக்கு நண்பர்கள் கிடையாது; பொறாமைக்கு ஓய்வு கிடையாது.

- சீனப் பழமொழி.

 தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும்.

- நெப்போலியன்.

 செயல் ஆற்றல் நிறைந்த சிறந்த அறிவாளிகளிடம் நல்லவைகளைச் செய்ய தேவையான அதிகாரம் இல்லாமலிருப்பதுதான் உலகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு.

- ஹீரோடோஸ்.

 மனித இனம், அவர்கள் இதயம் சரியான இடத்தில் தான் உள்ளது. ஆனால், அவர்கள் தலைதான் திறமையற்ற ஓர் உறுப்பாகிவிட்டது.

- சாமர்செட் மகம்.

 அறம் வேறு அரசியல் வேறு என்று கருதும் நண்பர்கள் இரண்டையும் என்றும் விளங்கிக் கொள்ள இயலாது.

- ஜான் மர்லே.

 ஒரு விஷயத்தை மறக்க முயலும் போது தான் நம்முடைய ஞாபக சக்தி சிறப்பாக வேலை செய்கிறது.

- பிராங்க்ளின் ஜோன்ஸ்.

 சோம்பல் என்பது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.

- தாமஸ் புல்லர்.

 ஓய்வு ஓர் அழகான ஆடை. ஆனால், அது இடைவிடாமல் அணியத் தக்கதன்று.

- போர்த்துகீசியப் பழமொழி.

 சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் செயல்படுகிறவனுக்குத்தான் இந்த உலகம் சொந்தம்.

- எமெர்சன்.

 அறிவுத் தேவையைவிட கவனக்குறைவுதான் நமக்கு அதிக கஷ்டங்களை உண்டாக்கி விடுகிறது.

- பிராங்க்ளின்.


 வெற்றி பெறுகிறவர்களின் ஒரே மந்திர சொல் 'இப்பொழுது'; தோல்வி பெறுகிறவர்களின் ஒரே சாப சொல் 'அப்புறம்'.

- ரூஸ் வெல்ட்.

 பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்; ஏழைகள் எப்படி உழைக்கிறார்கள் என்பதைப் பணக்காரர்கள் அறிய வேண்டும்.

- டீன் அச்சீசன்.

 துணிவுமிக்க மனிதனே தன் தொழிலில் ஒவ்வொரு முறையும் புதுமை படைத்து வெற்றி பெறுகின்றான்.

- டேல் டவுட்டன்.

 தயங்குபவன் கை தட்டுகிறான்; துணிந்தவன் கை தட்டல் பெறுகிறான்.

- ஜான் கென்னெடி.

தொகுப்பு:- பா. காருண்யா, மதுரை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.