அரசிற்கு நன்றி தெரிவித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.!


இலங்கையில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளையில்   

பொத்துவில், அறுகம் குடாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தனிமைப்படுத்தல்  விதிமுறைகளின் கீழ் கடல் அலைச்சறுக்கல் (surfing) விளையாட்டில் ஈடுபட அனுமதித்ததற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர்.


தற்போது நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள்   ஒரு மாத காலம் நாட்டில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர், ஆனால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு முதல் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதால் சிரமப்பட்டனர்.


அரசாங்கம் தலையிட்டு தங்களை நாட்டில் தங்க அனுமதித்ததற்கு ஹொட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


உலகின் முதல் பத்து  சுற்றுலா இரசிக்கும் இடங்களுள் ஒன்றாக இலங்கையின் அறுகம் குடா உள்ளது. இங்கு  கடற்கரையில் உலாவுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகிறார்கள். இங்கு  நெல் வயல்கள், காடு, அழகிய கடற்கரைகள், ரம்மியமான மலைகள் மற்றும் குளிர்மையான நீர் ஊற்றுக்கள், தேக்கங்கள் என்பன காணப்பட்டு இந்த நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன.


அறுகம்பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் surfing விளையாடுவதற்குரிய 10 இடங்கள் உள்ளன.


surfing படகுகளை வாடகைக்குக் கொடுப்பது இங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கு ஒரு தொழிலாகவே உள்ளது எனினும்  தற்போது கொவிட் நிலைமையால் வழமையைவிட  அவர்களது தொழில் பாதிப்படைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.