நிஜ யூத்துகளுடன் “யூத்“ பட பாடலுக்கு நடனமாடிய நடிகை சிம்ரன்… வைரல் வீடியோ

 
தமிழ் சினிமாவில் தனது நடனத்தாலும் தனிப்பட்ட நடிப்புத் திறமையாலும் முத்திரை பதித்தவர் நடிகை சிம்ரன். தளபதி விஜய், அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “யூத்” திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடியிருந்தார்.

இயக்குநர் வின்செட் இயக்கத்தில் கபிலன் வரிகளில் மணிஷர்மா இசையமைப்பில் வெளியான “ஆத்தோட்ட பூபதி நானடா”எனும் பாடல் அன்றைக்கே ஏராளமான ரசிகர்களை கவர்திருந்தது. தற்போது 19 வருடம் கழித்து நடிகை சிம்ரன் அதே பாடலுக்கு நிஜ யூத்துகளுடன் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


90கள் முதல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். பின்னர் நடிகர் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்து “துப்பறிவாளன்”, “பேட்ட” போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் பிரசாந்துடன் “அந்தகன்” திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை சிம்ரன், நடிகர் மாதவன் இயக்கும் “ராக்கெட்ரி நம்பி வளைவு” திரைப்படத்திலும் இணைந்துள்ளார். இதைத்தவிர “துருவ நட்சத்திரம்”, “சியான் 60“ போன்ற ஒருசில திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 19 வருடம் கழித்து தளபதி விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான “ஆத்தோட்ட பூபதி“ பாடல் மீண்டும் நடிகை சிம்ரன் நடனத்தில் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.