அமெரிக்காவில் மூன்றாவது டோஸ் (booster dose) கொரோனா தடுப்பூசி!

 


அமெரிக்காவில் குறைவான  நோய் எதிர்ப்பு சக்தி   உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் (booster dose) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

அவ்வாறு செலுத்துவது வேகமாக பரவி வரும் டெல்டா வேரியண்ட்டிடம் இருந்து மேலும் தற்காத்துக்கொள்ள உதவும் என கணித்துள்ளனர்.


இதுகுறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள அமெரிக்கர்களை கொரோனாவின் தாக்கத்தில் இருந்து விடுபட வைப்பதே நோக்கம். இந்த முடிவு அதிக ஆபத்துள்ள குழுவிற்கும், சுமார் 3 சதவீத வயது முதிர்ந்த அமெரிக்கர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார். 


இது நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படும் மக்களுக்கு செலுத்தப்படாது எனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.