வேல்முருகனுக்கு பிடிவாரண்ட்!


உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 9 பேருக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரணட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்த சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார்கள். சுங்கச்சாவடியிலிருந்த அறை மற்றும் கண்ணாடி, நாற்காலிகள் உடைத்துச் சூறையாடினர். இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ உட்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 25), தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வேல்முருகன் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 9 பேர் ஆஜராகவில்லை.

இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகநாதன் வேல்முருகன் எம்எல்ஏ உட்பட 9 பேருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.