வல்வெட்டித்துறையில் சுயேட்சைக்குழு வெற்றி!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் சுயேட்சைக்குழு வெற்றியடைந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியை தழுவியுள்ளது.
சுயேட்சைக்குழு சார்பில் களமிறங்கிய செல்வேந்திரா 9 வாக்குகளையும், கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிய சதீஷ் 9 வாக்குகளையும் பெற்றனர்.
இந்நிலையில் சுயேட்சைக்குழுவின் 4 வாக்குகள், ஈ.பி.டி.பியின் 2 வாக்குகள், ஈ.பி.ஆர்.எல்.எவ் 1 வாக்கு. சுதந்திரக்கட்சியின் 1 வாக்கு என்பவற்றுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தவிசாளர் கேசவனும் சுயேட்சைக்குழுவை ஆதரித்தார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 வாக்குகளும் சதீஷிற்கு கிடைக்கப்பட்டது.
வாக்கெடுப்பின் பின்னர் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம், “வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சியுடன் தமிழ் தேசியம் வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை