வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை சமந்தா!
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருவரும் தெலுங்கு திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த நிலையில் அண்மைக்காலமாக கிசு கிசு புயல் வீசி வருகிறது.
இதற்கு காரணம், சமீபத்தில் தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை சமந்தா திடீரென்று நீக்கினார். இதன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்றும், விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் என்றும் தகவல் பரவி வருகிறது. இது குறித்து சமந்தா எவ்வித கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்து வந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சமந்தா அளித்த பதிலில்,
இதுபற்றி ஏற்கனவே ஆயிரக்கணக்கான பதிவுகள் வந்து விட்டன. இன்னும் வந்துகொண்டே இருக்கிறது. ஏதாவது சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் எனக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல்லுவேன். இதற்கு முன்பு வந்த வியாக்கியானங்கள், விவாதங்கள், சந்தேகங்கள் போன்றவற்றுக்கெல்லாம் நான் எப்போதாவது விளக்கம் கொடுத்து இருக்கிறேனா? அல்லது கண்டனம் தெரிவித்து இருக்கிறேனா?. சினிமாவில் நூறு சதவீதம் எனது வேலையை செய்து வருகிறேன்.
எதையும் என்னால் செய்ய முடியாது என்று நினைத்தது இல்லை. எல்லாம் சிறப்பாக அமைந்தால்தான் ஒரு படம் வெற்றி பெறும். எப்படித்தான் நன்றாக நடித்தாலும், நல்ல இயக்குனரும், கதையும் இல்லாவிட்டால் சிறப்பாக அமையாது. கொரோனா எல்லோரது வாழ்க்கையையும் மாற்றிவிட்டது என சமந்தா கூறியாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை