தொடர்ந்து உயிரைப் பறிக்கும் நீட்


 நீட் தேர்வு முடிவு மீதான அச்சத்தின் காரணமாக அரியலூரைச் சேர்ந்த மற்றொரு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் கனிமொழி.

பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்றார். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர்.

இந்நிலையில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த இவர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார்.

ஆனால் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்திலும் மன உளைச்சலிலும் இருந்த மாணவி கனிமொழிக்கு அவரது தந்தை ஆறுதல் கூறியுள்ளார்.

எனினும் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என அச்சத்திலிருந்த மாணவி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த மாணவியின் பெற்றோர்கள் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கனிமொழி தூக்கில் சடலமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இன்று மாணவியின் உடல் குடும்பத்தினர், உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் இதுபோன்று விபரீத செயலில் ஈடுபடுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017ல் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இன்று அரியலூர் கனிமொழி வரை மொத்தம் 15 பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் வந்தால் 104 எண்ணை அழைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவியின் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தனது அரசியல் நாடகத்தையும் , நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதை, இனியாவது நிறுத்திவிட்டு

மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்க வேண்டும். மாணவர்கள் இனி இது போன்ற முடிவுகளை எடுக்காமல் வாழ்க்கையில் எந்த தேர்வையும் துணிந்து எதிர் கொள்ள வேண்டுமென உங்கள் உற்றார்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.