வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் வீட்டிற்கு செல்லலாம்!

 


வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சில மணிநேரங்களில் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் வீட்டிற்கு செல்லலாம்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் மோசடி இடம்பெறுவதான செய்திகள் வெளியான நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியதுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
,
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு சில மணித்தியாலங்களுக்குள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்கான ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.