அமெரிக்கா-ஜேர்மனிய இடையேயான நல்லுறவு தொடரும்!
வலுவான ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதே ஜேர்மனியின் முக்கிய கொள்கை பணியாக இருக்கும் என்று சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் Olaf Scholz கூறினார்.
இந்த பணி நாட்டின் சர்வதேச மூலோபாயம் மற்றும் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் என்று Olaf Scholz மேலும் கூறினார்.
அமெரிக்காவுடனான ஜேர்மனியின் உறவுகள் பற்றிய தனது பார்வையையும் பகிர்ந்து கொண்ட Olaf Scholz, transatlantic கூட்டாண்மை ஜேர்மனிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மிகவும் அவசியமானது.
அமெரிக்கா-ஜேர்மனிய இடையேயான நல்லுறவு தொடரும் என SPD தலைவர் Olaf Scholz உறுதியளித்தார்.
உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருகிறது, சில வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஒன்றாக செயல்பட வேண்டும் என கூறினார்.
Nord Stream 2 2 எரிவாயு பைப்லைன் குறித்து கருத்து தெரிவித்த Olaf Scholz, திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் கடமைகளை ஏற்க வேண்டும், அதே நேரத்தில் உக்ரைன் ஒரு போக்குவரத்து நாடாக இருக்க வேண்டும் என கூறினார்.
ஜேர்மனியின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிப் பெற்றது.
பொதுத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.1% வாக்குகள் கிடைத்து, Olaf Scholz தலைமையிலான SPD-க்கு 25.7% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
The Green Party 14.8%, the Free Democratic Party 11.5% மற்றும் the Alternative for Germany party 10.3% வாக்குகளைப் பெற்று பெற்றுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை